தமிழகத்தில் ஓபிஎஸ் மற்றும் சசிகலா இடையே நடைபெற்ற அதிகாரப் போட்டி கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரபப்பை ஏற்படுத்தியது. அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலாவை அக்கட்சி எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுத்தனர்,

இதனையடுத்து முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து சசிகலா தன்னை முதலமைச்சராக பதவி ஏற்க அழைக்க வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அவர் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு சென்னை பல்கலைக்ககழக நுற்றாண்டு விழா அரங்கில் பதவி ஏற்பு நிகழ்க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென போர்க் கொடி உயர்த்திய ஓபிஎஸ், தன்னை நிர்பந்தப் படுத்தி சசிகலா தரப்பினர் ராஜினாமா கடிதம் பெற்றுவிட்டனர். எனவே ராஜினாமா செய்ய முடியாது என தெரிவித்தார். இரு தரப்பினரும் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர்.

குழப்பமான இந்த சூழ்நிலையில் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வெளியிடவுள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து ஆளுநர் யாரையும் அழைக்காமல் மௌனம் காத்துவந்தார்.

இந்நிலையில் சசிகலா தரப்பிற்குதான் எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாகவும், எனவே அவர்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநரை சந்தித்து பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்ரமணியன் சாமி வலியுறுத்தினார்.

ஆனால் சசிகலா தண்டனை பெற்று சிறை சென்றதையடுத்து, எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினர். நீண்ட இழுபறிக்குப் பிறகு, நேற்று எடப்பாடி பழனிசாமியை அழைத்த ஆளுநர் பதவி ஏற்க அழைக்கப்பட்டு, அவர் முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பாஜக எம்பி சுப்ரமணியன்சுவாமி, தமிழக ஆளுநர் தன்னுடைய பரிந்துரையை ஏற்று செயல்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

இப்பிரச்சனையில் தமிழக பாஜக பூஜ்யமாகி போய் விட்டதாகவும் டுவிட்டர் பக்கத்தில் சூத்திரதாரி சு.சாமி தெரிவித்துள்ளார்.