தேர்தல் ரிசல்டுக்கு சரியாக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சி தலைவர்களும் கதி கலங்கி இடக்கும் நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி போட்ட ட்வீட் பாஜகவினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியில் ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும், மூன்றாவது அணியை அமைக்க எதிர்கட்சிகளும் வியூகங்களை வகுத்து வருகின்றன. தொங்கு நாடாளுமன்றம் அமையுமா? யாருக்கு மெஜாரிட்டி கிடைக்கும்? எதிர்க்டசியில் யார் பிரதமர் வேட்பாளர் என்கிற விவாதம் டெல்லி முதல் குக்கிராமம் வரை அனல் பறந்து வருகிறது.

 

இந்நிகையில் பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.,யுமான சுப்ரமணியன் சுவாமிஒரு ட்வீட்டை போட்டு பாஜகவை பதற வைத்திருக்கிறார். அதில் பாஜக 50 சீட்டுகளுக்கு குறைவாகப் பெற்றால் ஆச்சர்யமடைவேன் என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து 543 தொகுதிகளீள் 50 சீட்டுகள் மட்டும் தானா? எனக் குழப்பமடைந்து அதிர்ச்சியாகின்றனர். பின்னர் தெளிவு படுத்தும் வகையில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 50 சீட்டுக்கள் என ஜோக்கடித்து ஸ்மைலியை பதிவு செய்துள்ளார். 

 

இதனால் கோபடைந்த பாஜகவினர், சுவாஜி, உங்கள் திருவிளையாடலை காவிகளிடம் நிறுத்திக் கொள்ளுங்கள். உத்தரப்பிரதேசத்தில் 50க்கும் மேல் இந்தியாவில் 300க்கும் மேல் பாஜக சீட்டுக்களை பிடிக்கும். என்ன ஆச்சு அக்கவுண்டை ஹேக் செய்து விட்டார்களா? சுப்ரமணியன் சுவாமி காங்கிரஸில் சேர்ந்து விட்டாரா..? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.