Subramanian Swamy criticism about Rajini entry into politics

அரசியல் பிரவேசத்தை அறிவித்த ரஜினியின் கருத்து வெறும் அரசியல் அறிவிப்பாக மட்டுமேதான் உள்ளது என்று வேறு எந்த விவரங்களையும் அவர் குறிப்பிடவில்லை என்றும் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அரசியலுக்கு வருவது உறுதி, இது காலத்தின் கட்டாயம் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்றும் வரும் உள்ளாட்சி தேர்தலுக்கு நேரமில்லாததால் போட்டியிடவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது குறித்து அவர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

உண்மை, உழைப்பு, உயர்வு இதுதான் தாரக மந்திரம். நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். நல்லதே நடக்கும். இதுதான் நமது கொள்கை. வரும் தேர்தலில், நம்ம படையும் இருக்கும் என்று ரஜினிகாந்த் கூறினார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து, பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் அரசியல் அறிவிப்பு குறித்து பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, கடுமையாக விமர்சனம் செய்துளள்ர்.

இது குறித்து, செய்தியாளர்கள் அவரிடம் பேசும்போது, இது வெறும் அரசியல் அறிவிப்பு தான். வேறு எந்த விவரங்களையும் அவர் குறிப்பிடவில்லை என்றார். ஏன் என்றால் அவர் படிப்பறிவில்லாதவர். ஊடகம்தான் இவற்றை பெரிதாக காட்டுகிறது என்றும் சுப்பிரமணியன் சுவாமி கடுமையான விமர்சனதை முன் வைத்தார்.