பா.ஜ.க. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த அரசியல்வாதியுமான சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது: தற்போதைய சிக்கலான சூழ்நிலையிலிருந்து பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு திருப்பவேண்டும் என்றால் பிரதமர் நரேந்திர மோடி விரும்பதகாத கேட்கும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வளர்த்து கொள்ள வேண்டும். மேலும் தனது அரசின் பொருளாதார நிபுணர்களை அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும்.

மோடி அரசை நடத்தும் விதத்தைபார்க்கும்போது சில பேர் மட்டுமே கட்டுப்பாட்டை மீறி பேச முடியும். தன் முகத்தை பார்த்தை இதை செய்யாதீர்கள் என்று மக்கள் சொல்வதை மோடி ஊக்குவிக்க வேண்டும். 

ஆனால் அவர் இன்னும் அந்த மனநிலையை வளர்த்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். ரூபாய் மதிப்பிழப்பு மற்றும் அவசர கோலத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் வரியை அமல்படுத்தியதே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம். அதிக பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான கொள்கைகளை அரசு புரிந்து கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுவரை தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ரூபாய் மதிப்பிழப்பு மற்றும் அவரசம் அவசரமாக ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியதுதான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வந்தன. இந்நிலையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரே இந்த குற்றச்சாட்டை கூறியிருப்பது அந்த கட்சியினருக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.