suba veerapandiyan controversial tweet
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் பேச்சுக்கு ஆண்டாள் சன்னதியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்த ஜீயர் சடகோப ராமானுஜர், உண்ணாவிரதத்தை கைவிட்டார்.
தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் பேசிய வைரமுத்து, வெளிநாட்டு ஆய்வறிஞர் ஒருவர் ஆண்டாள் குறித்து எழுதியிருந்ததை மேற்கோள் காட்டினார். அந்த கட்டுரை நாளிதழ் ஒன்றிலும் வெளிவந்தது. ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் சர்ச்சை கருத்துக்கு பாஜகவினரும் இந்து அமைப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த நாளிதழின் ஆசிரிசியர் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாள் சன்னதியில் மன்னிப்பு கோரினார். ஆனால், வைரமுத்து மன்னிப்பு கோரும் போராட்டம் நடத்துவதாக கூறி போராடிவந்த ஜீயர் சடகோப ராமானுஜர், பிப்ரவரி 3 வரை வைரமுத்து மன்னிப்பு கோர கெடுவிதித்தார். ஆனால், வைரமுத்து மன்னிப்பு கோராததை அடுத்து நேற்று முதல் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
ஆனால், எச்.ராஜா, எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உண்ணாவிரதத்தை ஜீயர் முடித்துக்கொண்டார். வைரமுத்துவை ஆண்டாள் பார்த்துக்கொள்வார் என கூறி உண்ணாவிரதத்தை ஜீயர் கைவிட்டார்.
இந்நிலையில், இப்போதாவது ஆண்டாள் மீது ஜீயருக்கு நம்பிக்கை வந்திருக்கிறதே என சுப.வீரபாண்டியன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கவிஞர் #வைரமுத்து வை #ஆண்டாள் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில், #ஜீயர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளாராம். நல்லது, 28 மணி நேரத்துக்கு முன்பு வரை ஆண்டாள் மீது வராத நம்பிக்கை இப்போதாவது வந்திருக்கிறதே!
— SubaVeerapandian (@Suba_Vee) February 9, 2018

ஆண்டாள் பிரச்னை முடியும் தருவாயில், இப்படியொரு கருத்தை பதிவிட்டுள்ளார் சுப.வீரபாண்டியன்.