நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகு பெற்றோர்கள் மாணவர்களை திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகு பெற்றோர்கள் மாணவர்களை திட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் தோல்வியடைந்த மாணவர்களுக்கு 104 மற்றும் 1100 என்ற எண்கள் மூலம் இலவச மனநல ஆலோசனை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் நேரத்தில் திமுக வாக்குறுதி அளித்தது. இதை நம்பி ஏராளமானோர் திமுகவுக்கு வாக்களித்தனர் ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் தற்போது வரை நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை, ஆனால் அத்தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய அது குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் உள்ளது. ஆனால் மத்திய பாஜக அரசு நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதில் உறுதியாக இருந்து வருகிறது.

நீட் விவகாரத்தில் அதிமுக என்ன நடவடிக்கை எடுத்ததோ அதே நடவடிக்கைதான் தற்போது திமுக அரசும் எடுத்துள்ளது. ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்து விடுவோம், அதை எப்படி ரத்து செய்யவேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும் என அடுக்கடுக்கான பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக மக்களை ஏமாற்றி விட்டது என்ற விமர்சனம் திமுக மீது எதிர்க்கட்சிகள் வைத்து வருகின்றன, இதற்கிடையில் நீட் தேர்வை எதிர்த்து மாணவர்கள் தற்கொலை என்பது தொடர்கிறது.

இதையும் படியுங்கள்: நடுவானில், பறக்கும் விமானத்தில், தில்லா ஸ்டாலின் முன்னிலையில் பெண் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ..

நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவு இன்று வெளியாகி உள்ளது, முன்னதாக அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக ஒப்புதலின் பேரில் தான் கடந்த 4 ஆண்டுகளாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது, நீட் தேர்வு வந்ததிலிருந்து இந்த ஆண்டு தான் அதிக அளவில் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தொடர்ந்து மனநில ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

டிஎம்எஸ் வளாகத்திலேயே 50 ஆலோசகர்கள் அமர்த்தப்பட்டு ஆலோசனை வழங்கப்படுகிறது. 564 மாணவர்கள் அதிக மன உளைச்சலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, அவர்களுக்கு தொடர்ந்து மனநல ஆலோசனை வழங்கப்படும், 12 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளிவரும், 564 மாணவர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தேர்வு முடிவுகள் வந்த பிறகு தேர்ச்சி பெறாத குழந்தைகள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட மன ஆலோசகர் மூலம் ஆலோசனை வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:  ரேஷன் கார்டில் பெயர்,முகவரி மாற்றம் செய்யனுமா.? புதிய குடும்ப அட்டை வாங்கனுமா.? தமிழக அரசின் புதிய அறிவிப்பு

தேர்ச்சி பெறாத மாணவர்களை பெற்றோர்கள் திட்டுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது, தேர்வு என்பது எப்போது வேண்டுமானாலும் எழுதலாம் நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.