Asianet News TamilAsianet News Tamil

மாணவர்கள், பெற்றோர்கள் வயிற்றில் பால்வார்த்த முதல்வர். எடப்பாடியாரை தலையில் வைத்து கொண்டாடும் ஆசிரியர் சங்கம்.

மாணவர்களின் நலன்கருதி தமிழ்நாடு அரசு உடலையும், உள்ளத்தினையும் ஒருசேர ஆய்வுசெய்து  பாதுகாப்பினை உறுதிசெய்து எதையும் முன்னெடுத்து செல்வதில் தமிழ்நாடு முதன்மையாகத் திகழ்கிறது என்றால் அதுமிகையாகாது. 
    
 

Students parents are happy by  chief Minister Announce, Teachers' Association celebrating Edappadiyar.
Author
Chennai, First Published Feb 25, 2021, 3:43 PM IST

9,10,11 வகுப்பு அனைவரும் தேர்ச்சி என அறிவித்துள்ள மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நன்றி
யை தெரிவித்துக் கொள்வதாக அச்சங்கத்தில் மாநிலத் தலைவர் இளமாறன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 9 மாதங்களாக கல்வி முடக்கமாகியிருந்த நிலையில் நேரிடைபயிற்சியே முழுமையாகும் என்று வலியுறுத்தியதன் பேரில் கடந்த ஜனவரி முதல் 9,10,11, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. 

Students parents are happy by  chief Minister Announce, Teachers' Association celebrating Edappadiyar.   

இந்நிலையில் திடிரென்று பொதுத்தேர்வு அறிவிப்பு வந்தால் எப்படி எதிர்நோக்கப் போகிறார்கள் என்ற அச்சத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும்குழப்பத்தில் இருந்தார்கள். மாணவர்களின் நலன்கருதி தமிழ்நாடு அரசு உடலையும், உள்ளத்தினையும் ஒருசேர ஆய்வுசெய்து  பாதுகாப்பினை உறுதிசெய்து எதையும் முன்னெடுத்து செல்வதில் தமிழ்நாடு முதன்மையாகத் திகழ்கிறது என்றால் அது மிகையாகாது. 

Students parents are happy by  chief Minister Announce, Teachers' Association celebrating Edappadiyar.

அந்த வகையில், தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் மாண்புமிகு. முதல்வர் அவர்கள் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் இந்தக் கல்வியாண்டில் அனைவரும் தேர்ச்சி  என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். இது மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்று மாண்புமிகு. முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios