கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்ற வாசலில் போராட்டம் நடத்திய பாஜகவினர் - 250 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கந்த சஷ்டி கவசத்தையும், முருகரையும் இழிவுபடுத்தி யூடியூப் சேனலில் வீடியோவை கருப்பர் கூட்டம் பகிர்ந்திருந்தது. இது இந்து மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியது. பாஜக- இந்து உணர்வாளர்கள் கருப்பர் கூட்டம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவர்கள் செந்திவாசன், சுரேஷ் உள்ளிட்டவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிவு போலீசார் செந்தில் வாசனை கைது செய்தனர். 

இதனையடுத்து கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் நிர்வாகிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்ற வாசலில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஊரடங்கு நேரத்தில்144 தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக 250 பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் அலுவலகத்தையும் காவல்துறையினர் மூடியுள்ளனர்.