‘’முருகப்பெருமானின் துதி கந்தசஷ்டி கவசத்தை இழிவாக பேசி விடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் யூடியூப் சேனல் மற்றும் ஹசிப் முகம்மது மீது நடவடிக்கை எடுக்காமல் அதை கண்டித்த கார்டூனிஸ்ட் வர்மாவை கைது செய்துள்ளது அப்பட்டமான இந்து விரோத நடவடிக்கை. இதை வன்மையாக கண்டிக்கிறேன்’’என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியதற்கு அரசியல் பிரகர் ஆலூர் ஷானவாஸ் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’கந்த சஷ்டி கவசத்தை இழிவு செய்ததாக கருப்பர் கூட்டம் செந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சுரேந்திரன் முன்பிணை கேட்டுள்ளார். இவர்கள் முஸ்லிம் இல்லை. ஆனால், ஹசிப் என்ற பெயரை இதில் புனைந்து, இரு மத மோதலாக மாற்ற முயன்றார் ஹெச்.ராஜா.
காந்தியை கொன்றுவிட்டு முஸ்லிம் மீது பழி போட்டவர்கள் தானே!’’ என அவர் தெரிவித்துள்ளார்.

ஷானவாஸின் கருத்துக்கு நெட்டிசன்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ‘’கருப்பர் கூட்டத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது உங்கள் கட்சி தலைவர். இன்று இந்து மக்கள் கருப்பர் கூட்டத்துக்கு எதிராக களமிறங்கியவுடன் அதைக் கண்டு பயந்து சுரேந்திரனை மட்டும் பலிகடா ஆக்கி உங்கள் கூட்டம் தப்பிவிடலாம் என்று தப்பு கணக்கு போடுகிறது. அது  கனவிலும் நடக்காது’’ எனத் தெரிவித்துள்ளனர்.