மூன்றாவது கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்தித்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவாரா..? மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தருவாரா மு.க.ஸ்டாலின் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 

ஐபேக் நிறுவனத்தை சேர்ந்த தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோருக்கு இது அதிர்ஷ்ட காலம் என்றே சொல்ல வேண்டும். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கம், தமிழகம் என இரு மாநிலங்களிலும் பிரஷாந்த் கிஷோர் தேர்தல் வியூகராக இருந்து பாஜகவின் திட்டங்களை முறியடித்து மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரையும் கணிப்புகளையும் தாண்டி அமோக வெற்றி பெற வியூகம் அமைத்துக் கொடுத்தார். இந்நிலையில் மம்தா பானர்ஜியுடன் 2026ம் ஆண்டு வரை ஒப்பந்தத்தை நீட்டியுள்ளார்.

இந்நிலையில், தான் தேர்தல் வியூகம் வகுக்கும் வேலையை நிறுத்தி வைக்கிறேன். அந்த வேலையை எனது சிஷ்யர்கள் பார்த்துக் கொள்வார்கள் என அறிவித்தார். ஆனாலும், அவரது தேவை அதிகரித்து இருப்பதால் பல கட்சிகள் அவரிடம் ஒப்பந்தம் பேச தயாராகி வருகின்றன. 

தற்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், பிரசாந்த் கிஷோரை இரு வார இடைவெளியில் இன்று மீண்டும் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்மையில் முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் முக்கியத்துவம் பெற்றன. வெற்றி பெற்ற தி.மு.க., மற்றும் திரிணாமுல் காங்கிரசுக்காக பிரஷாந்த் கிஷோர் பிரசார வியூகம் அமைத்திருந்தார். ஆனால் அரசியல் வியூகப் பணியில் இருந்து விலகப் போவதாக தேர்தல் முடிவுகளுக்கு பின் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை பிரசாந்த் கிஷோர் அண்மையில் சந்தித்துப் பேசினார். இது, 'மிஷன் 2024' எனப்படும் அடுத்த மக்களவை தேர்தலை ஒட்டிய திட்டமிடல் எனவும்; அந்த தேர்தலில் பா.ஜ.க,வை எதிர்த்து வலிமையுடன் போராட எதிர்க் கட்சிகளை ஒன்றிணைப்பது பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், பிரசாந்த் கிஷோரை மீண்டும் இன்று சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு வார இடைவெளியில் 2வது முறை சந்திப்பு நடைபெற்றுள்ளது. ரகசியமாக நடந்த இந்த சந்திப்பில் அடுத்த மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜியை முன்னிறுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மூன்றாவது கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்தித்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருவாரா..? மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தருவாரா மு.க.ஸ்டாலின் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.