Asianet News TamilAsianet News Tamil

இத்தோட நிறுத்திகோங்க... பாஜகவினருக்கு இனி இடமில்லை... வரிசைக்கட்டிவந்த பாஜகவினருக்கு கேட் போட்ட அகிலேஷ்!

 கருத்துக்கணிப்புகள் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் நிலையிலும் பாஜகவிலிருந்து விலகி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தது பேசுபொருளானது. 

Stop with this ... no place anymore for bjp ... Akhilesh who put the gate for the BJP who lined up!
Author
Lucknow, First Published Jan 15, 2022, 8:30 PM IST

இனி பாஜகவிலிருந்து விலகி சமாஜ்வாடி கட்சிக்கு வருவோருக்கு இடமில்லை என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்ட நிலையில், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்டவுடனே ஆளுங்கட்சியான பாஜகவிலிருந்து சமாஜ்வாடி கட்சிக்கு தாவுவோர் எண்ணிக்கை அதிகரித்தது. பாஜகவை சேர்ந்த இதர பிற்படுத்தப்பட்டோர் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களான சுவாமி பிரசாத் மௌரியா மற்றும் தரம் சிங் சைனி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சமாஜ்வாடிக்கு தாவினர்.Stop with this ... no place anymore for bjp ... Akhilesh who put the gate for the BJP who lined up!

இதேபோல பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களான ரோஷன் லால் வர்மா, பிரிஜேஷ் பிரஜாபதி, முகேஷ் வருமா, வினை சங்கையா பகவதி சாகர் உள்பட 6 பேர் பாஜகவிலிருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர். உத்தரப்பிரதேச தேர்தலில் மீண்டும் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும் என்று பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. கருத்துக்கணிப்புகள் ஆளும் பாஜகவுக்கு சாதகமாக இருக்கும் நிலையிலும் பாஜகவிலிருந்து விலகி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தது பேசுபொருளானது. தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என்பதால்தான் இவர்கள் பாஜகவிலிருந்து விலகி சமாஜ்வாடிக்கு ஓடுவதாக பாஜக விமர்சனம் செய்திருந்தது.Stop with this ... no place anymore for bjp ... Akhilesh who put the gate for the BJP who lined up!

பாஜகவிலிருந்து வருவோர் எண்ணிக்கை அதிகரித்த நிலையில், அவர்களால் சமாஜ்வாடி கட்சியில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் சமாஜ்வாடியில் பலரும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜகவினர் சமாஜ்வாடி கட்சியில் இணைவது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “இனி பாஜகவிலிருந்து யாரும் சமாஜ்வாடி கட்சியில் சேர அனுமதி கிடையாது. ஏற்கனவே சமாஜ்வாடி கட்சியில் இடங்கள் நிரம்பி விட்டன” என்று அகிலேஷ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios