கொரோனா வைரஸ் தொற்று உலகத்தையே முடக்கி போட்டிருக்கிறது. உலக நாடுகளான அமெரிக்கா இத்தாலி இங்கிலாந்து ரஷ்யா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் உயிர் பலிகளையும், பொருளாதாரத்தையும் இழந்து தவித்து வருகிறது. இந்த இழப்பில் இருந்து மீள்வதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.இந்த நிலையில் தான் மலேரியா மருந்துகள் கொரோனாவிற்கு நல்ல முன்னேற்றம் தருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்ததும் அமெரிக்கா, இந்தியாவை மிரட்டியே அந்த மருந்துகளை வாங்கியது எல்லோருக்கும் நினைவிருக்கும். உலகநாடுகள் முழுவதும் இந்த மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதை நிறுத்த சொல்லியிருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் எச்.ஐ.வி மருந்து லோபினாவிர் ரிடோனாவிர் ஆகியவற்றை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


 அறிவிப்பில்..'கொரோனா நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை முடிவுகள், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் லோபினாவிர்,ரிடோனாவிர் ஆகியவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதத்தில் சிறிதளவு மாற்றத்தை மட்டுமே காட்டுகின்றன. இறப்புகளை தடுப்பதில் எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை.உலக சுகாதார அமைப்பு, பல பெரிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் தீவிர கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே பொருந்தும். மருத்துவமனையில் சேர்க்கப்படாத நோயாளிகளுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளாகப் பயன்படுத்தப்படுவது குறித்து எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.