குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் திருப்பதிக்கு நேற்று முன்தினம் வந்தார். அவரை வரவேற்கும் விதமாக ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் தாடேப் பள்ளியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கண்ணவரம் விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டார். 

அப்போது, விஜயவாடாவில் உள்ள பேன்ஸ் சர்க்கிள் அருகே சென்று கொண்டிருந்த போது தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று முதலமைச்சர் சென்ற கான்வாய் பின்னால் வந்தது. 

இதனைப்பார்த்த ஜெகன்மோகன் உடனடியாக கான்வாய் வாகனங்கள் அனைத்தையும் சாலையோரம் நிறுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
இதையடுத்து, கான்வாய் வாகனங்கள் அனைத்தும் சாலையோரம் நிறுத்தப்பட்டது. பின்னர், ஆம்புலன்ஸ் சென்ற பிறகு 5 நிமிடம் கழித்து முதலமைச்சர்  தனது வாகனத்தில் புறப்பட்டு சென்றார். 

இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் நெகிழ்ச்சியடைந்து முதலமைச்சர் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.