sterlite closed it cause a lot of loss to india

100 நாள் போராட்டம்…. உண்ணாவிரதம்….துப்பாக்கி சூடு….. 13 பேர் உயிரிழப்பு என பல சம்பவங்களுக்குப் பின் தற்போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், இனி இந்தியாவுக்கான தாமிரத்தை வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இந்­திய தர நிர்­ணய நிறு­வ­னம் தெரிவித்துள்ளது.

வேதாந்தா குழு­மத்­தைச் சேர்ந்த ஸ்டெர்­லைட் இண்­டஸ்ட்­ரீஸ் நிறுவனம் , இந்­தி­யா­வின் தாமிர உற்­பத்­தி­யில், குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்கி வந்­தது.

ஆனால் சுற்­றுச்­சூ­ழல் மாசு கார­ண­மாக, துாத்துக்­குடி, ஸ்டெர்­லைட் ஆலைக்கு எதி­ரான போராட்­டத்­தின்போது நடைபெற்ற துப்­பாக்­கிச் சூட்­டில், 13 பேர் இறந்­த­னர். இதை­ய­டுத்து, தமிழக அரசு உத்­த­ர­வின்­படி, ஸ்டெர்­லைட் ஆலை மூடப்­பட்­டது. அதே நேரத்தில் உச்சநீதிமன்றம் சென்று ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வேதாந்தா குழுமம் அறிவித்துள்ளது.

இந்­நி­லை­யில், ஸ்டெர்­லைட் ஆலை மூடப்­பட்டு, தாமிர உற்­பத்தி முடங்­கி­யுள்­ள­தால், உள்­நாட்டு தேவையை பூர்த்தி செய்ய, வெளி­நா­டு­களில் இருந்து தாமி­ரம் இறக்­கு­மதி செய்ய வேண்டிய சூழல் உரு­வா­கி­யுள்­ளது.

கடந்த ஆண்டு இந்­தி­யா­வின் தாமிர உற்­பத்தி, 8.42 லட்­சம் டன்­னாக இருந்­தது. இதில், ஸ்டெர்­லைட் ஆலை­ மட்டும் 48 சத­வீ­த தாமிரத்தை உற்பத்தி செய்து கொடுத்து வந்தது. அதே நேரத்தில் தொழில் வளர்ச்சி, அதிகரிக்கும் தேவை போன்ற பல காரணங்களால் தாமிரத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது.

பொறி­யி­யல் மற்­றும் மின்­னணு சாத­னங்­கள், வாக­னம், வீட்டு பயன்­பாட்டு பொருட்­கள் உள்ளிட்டவற்றில் தாமிரத்தின் தேவையை கருத்தில் கொண்டு ஆண்­டுக்கு, 4 லட்­சம் டன் தாமிர உற்­பத்­தியை மேற்­கெண்டு வந்த ஸ்டெர்­லைட் ஆலை, அதன் விரி­வாக்க நட­வ­டிக்­கையில் இறங்­கி­யது. ஆனால், தற்­போது, போராட்டம் காரணமாக வழக்­க­மான செய்யப்படும் உற்­பத்­தியை கூட மேற்­கொள்ள முடி­யாத நிலை தற்போது ஏற்­பட்­டு உள்­ளது.

இந்நிலையில் இந்­திய தர நிர்­ணய நிறு­வ­னத்­தின் மூத்த துணை தலை­வர், ஜெயந்தா ராய் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, நாட்­டின் தற்­போ­தைய தாமிர உற்­பத்தி, உள்­நாட்டு தேவைக்கு போது­மா­ன­தாக உள்­ளது. அத­னால், தாமி­ரம் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்றன.

இந்­நி­லை­யில், பெருகி வரும் பல்­வேறு தொழில்­நுட்­பங்­கள் கார­ண­மாக, தாமி­ரத்­தின் பயன்­பாடு அதி­க­ரித்து வரு­கிறது. அத­னால், அடுத்த இரண்டு ஆண்­டு­களில், தாமி­ரத்தை இறக்­கு­மதி செய்ய வேண்­டிய நிலை ஏற்­படும் என தெரிவித்தார்.

இந்­நி­லை­யில், நாட்­டின் மொத்த தாமிர உற்­பத்­தி­யில், சரி­பாதி பங்­க­ளிப்பை கொண்­டுள்ள ஸ்டெர்­லைட் ஆலையும் மூடப்­பட்­டுள்­ளது. மேலும் இந்தியாவில் தாமிர உற்­பத்தி தொழிற்­சாலைகளை இனி எங்குமே தொடங்க முடியாத நிலையே ஏற்படுள்ளது.

இத­னால், தாமிரத்தின் உள்­நாட்டு தேவையை பூர்த்தி செய்ய, அதனை இறக்­கு­மதி செய்ய வேண்­டிய நிலை உருவாகியுள்ளதாகவும் ஜெயந்தா ராய் அவர் தெரி­வித்­தார்