தான் ஒரு கடுமையான நெருக்கடியில் சிக்கி இருந்தபோது  தனக்கு ஒரு மூத்த சகோதரனைப் போல அருண்ஜேட்லி செயல்பட்டார் என அவரது சிலை திறப்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நெகிழ்ச்சிபட தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் அருண் ஜேட்லியின் முழு உருவச் சிலையை இன்று உன் துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.  பின்னர் அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் கூறியதாவது:-  பாஜக தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த ஜேட்லி 1999 முதல் 2013 வரை டிடிசிஏ தலைவராக இருந்தார். 

அவருக்கு பிறகு ரஜத் சர்மா டிடிசிஏ தலைவரானார். அவர் பதவி விலகிய போது ஜெட்லியின் மகன் ரோகன் எதிர்பார்ப்பின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்ற விவாதங்களில் ஜெட்லியின் வாதங்களுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அவர் நாடாளுமன்ற உரையில் ஒவ்வொரு கேள்விக்கும் துல்லியமாக பதிலளிக்க கூடியவர். சிறந்த நாடாளுமன்ற வாதி என பெயர் எடுத்தவர். மோடியின் நம்பிக்கைக்குரியவர், அவருக்கு நெருக்கமான நண்பராக இருந்தவர் ஜெட்லி. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் அவர் தீவிரமாக பணியாற்றினார்.  

ஜெட்லி மிகவும் தர்க்கரீதியான தலைவராக இருந்தார். ஒவ்வொரு கேள்விக்கும் துல்லியமாக பதில் அளிப்பார் கிரிக்கெட் போட்டிக்கு அவர் முதுகெலும்பாக செயல்பட்டார். கிரிக்கெட் போட்டி குழந்தைகளுடைய படிப்பை கெடுக்கிறது என பெற்றோர்கள் ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தனர், ஆனால் இன்று குழந்தைகள் கிரிக்கெட் ஒரு தொழிலாகவே மாறியுள்ளது. என்னை விட வயதில் மூத்தவர், என்னை ஒரு சகோதரனைப் போல அவர் பாவித்தார். கிரிக்கெட்டில் இரண்டு வகையான பங்களிப்புகள் உள்ளன. ஒன்று விளையாடுவது அதன் மூலம் நாட்டிற்கு மரியாதையை கௌரவத்தை பெற்றுத்தருவது. மற்றொன்று மற்றவர்கள் விளையாடும் சூழ்நிலையை உருவாக்கித் தருவது. ஜெட்லி மற்றவர்கள் விளையாட சூழ்நிலையை உருவாக்கியவர். இவ்வாறு அவர் பேசினார்.