state legal help for Shah Zada why this Kolaveri Da tweet by rahul
புகார் சொன்னா கேஸ் போட்ட அமித் ஷா மகன் பேரில் ராகுல் அடிக்கிறார் கிண்டல்... அதுவும் தனது டிவிட்டர் பக்கத்தில்! அமித் ஷா மகன் ஜெய் ஷாவுக்கு அரசுத் தரப்பு வழக்கறிஞரே உதவுகிறாரே...! ஒய் திஸ் கொல வெறி? என்று பரிதாபமாகக் கெஞ்சும் நிலையை ராகுல் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று டிவிட்டரில் கேலி செய்கிறார்கள் சிலர்!
குஜராத் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் விரைவில் வரவுள்ளது. குஜராத்தில் விட்ட இடத்தை எப்படியும் பிடிக்க வேண்டும் என்று, காங்கிரஸ் துணைத்தலைவர் குஜராத்துக்கு அடிக்கடி பயணம் செய்கிறார். கூட்டங்களில் அதிகம் கலந்து கொள்கிறார். மனத்தில் தோன்றியதை எல்லாம் பேசி வருகிறார். சோர்ந்து போய் கிடக்கும் காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப் படுத்துவது போல், பேசவும் செய்கிறார்.
இந்நிலையில், பாஜக., தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா நடத்தி வரும் நிறுவனம், அண்மைக் காலத்தில் 16 ஆயிரம் மடங்கு அசுர வளர்ச்சி அடைந்ததாக, இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டது. இதற்காக, அந்த இணையதளம் மீது 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு, ஜெய் ஷா சார்பில் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கில், அரசுத் தரப்பு வழக்குரைஞர் அவருக்காக உதவி வருகிறார். இதனை கிண்டல் செய்து, இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட ராகுல் காந்தி தன் பங்குக்கு கலாய்த்து வருகிறார்.

அவரது கேலியின் ஒரு பகுதியாக, தனது டிவிட்டர் பதிவில், ஒய் திஸ் கொல வெறிடா.. என்று கேட்டு, அதில் அமித்ஷா மகனுக்கு அரசு வழக்கறிஞர் உதவி என்று கூறி கிண்டலடித்துள்ளார்.
