அங்கு தொடர்ச்சியான கூட்டங்கள், மக்கள் சந்திப்பு என படு பிசியாக இருந்த அவர், நீண்ட தூரம் பயணித்து சென்று வந்துள்ளார். ஆனாலும் ஓய்வு, கலைப்பு என்றில்லாமல் வழக்கம் போல அலுவல்பணி ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளார். துபாய் திரும்பிய கையோடு இன்று காலை சென்னை வேளச்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்பிய முதலமைச்சர் வேளச்சேரியில் மழை வெள்ள தடுப்பு வடிகால் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். துபாய் சென்று திரும்பிய பயண களைப்புக்கு மத்தியிலும் ஓய்வின்றி அவர் பணியாற்றி வருவது பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

ஸ்டாலினை ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு என்றார் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஏன்.. அவரது கூட்டணிக் கட்சித் தலைவர்களே கூட ஸ்டாலினை பார்த்து வியக்கும் ஒன்று விஷயம் உண்டென்றால் அது அவருடைய சுறுசுறுப்பும், அயராத உழைப்பும்தான். இதை காங்கிரஸ் கட்சி தலைவர்கள், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்களும் பலமுறை மேடைகளில் பேசி உள்ளனர். ஏன் எதிர்க்கட்சியான அதிமுக, பாமகவினரே கூட ஸ்டாலினின் உழைப்பை அங்கீகரித்து பலமுறை பேசியுள்ளனர். அந்த அளவிற்கு எதையும் ஈடுபாட்டுடன் செய்யக்கூடியவர் அவர். கடந்த மழை வெள்ளத்தின் போதும் அவர் சுற்றி சுழன்று களத்தில் பணியாற்றியதை அனைவரும் அறிவர்.

கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோதுதான் அவர் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அந்த வெற்றியைக் கூட கொண்டாட முடியாத மனநிலையில் இருந்த அவர், கொரோனா பணிகளை முடுக்கி விட்டு போர்களம் பூண்டு சுற்றிச் சுழன்றதை மக்கள் எவரும் மறக்க வில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில்தான் நான்கு நாள் பயணமாக துபாய் சென்றது அவர் பல தொழில் முனைவோர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்துள்ளா. அவரின் இந்த பயணத்தின் மூலம் 6500 கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவரின் பயணத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தாலும் அது வெற்றி பயணமாகவே கருதப்படுகிறது. இந்நிலையில்தான் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 3 மணிக்கு அவர் துபாயில் இருந்து சென்னை திரும்பினார்.

அங்கு தொடர்ச்சியான கூட்டங்கள், மக்கள் சந்திப்பு என படு பிசியாக இருந்த அவர், நீண்ட தூரம் பயணித்து சென்று வந்துள்ளார். ஆனாலும் ஓய்வு, கலைப்பு என்றில்லாமல் வழக்கம் போல அலுவல்பணி ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளார். துபாய் திரும்பிய கையோடு இன்று காலை சென்னை வேளச்சேரி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பருவமழை காலங்களில் பாதிக்கப்படும் பகுதிகளில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை அவ்வப்போது அவர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். 

அந்த வகையில் இன்று காலை வேளச்சேரி பகுதி காந்தி சாலை, ஜெயந்தி தெரு, ரவி தெரு, சீதாபதி 2வது குறுக்கு தெரு, குருநானக் கல்லூரி சந்திப்பு பகுதிகளில் நடைபெற்றுவரும் 3.84 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன் வேளச்சேரி பிரதான சாலை, வேளச்சேரி புறவழிச்சாலை, சிக்னல் முதல் பெஸ்ட் ஹோட்டல் வரை நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் திட்டப் பணிகளையும் பார்வையிட்டு படைகளின் நிலைமை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதேபோல் பெருங்குடியில் உலக வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவனத்தின் அலுவலகத்தையும் அவர் திறந்து வைத்தார். அமேசான் நிறுவனம் முதன் முதலில் தமிழ்நாட்டில் 50 பணியாளர்களுடன் தொடங்கப்பட்டு இன்று 11,000 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சுமார் 6,000 பேர் அமர்ந்து பணியாற்ற கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவன அலுவலகத்தை அவர் இன்று திறந்து வைத்தார். அதேபோல சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே 400 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சென்னை மத்திய சதுக்கத்தை முதலமைச்சர் நாளை திறந்து வைக்க உள்ளார்.

துபையில் இருந்து அதிகாலை 3 மணிக்கு திரும்பிய அவர் ஒரு சில மணி நேரம் ஒய்வெடுத்து விட்ட வழக்கம் போல அலுவல் பணிக்கு திருப்பியுள்ளார். நீண்ட தூரம் பயணித்து வந்த அவர் ஓய்வெடுக்க செல்லாமல் அலுவல் பணிகளை துவங்கியிருப்பது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.