Stalins personality as effective jabs - turaimurukan Speech

கலைஞரை போல் ஆளுமை திறன்மிக்கவர் ஸ்டாலின் எனவும், அவருக்கு நிகர் யாரும் இல்லை எனவும் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை திநகரில் திமுக சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், இந்த கூட்டத்தில் முதன்மை செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:

தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக போட்டா போட்டி அரசியல் தான் நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஆட்சி நிர்வாகம் எதுவும் நடைபெறவில்லை.

விரையில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். மீண்டும் தேர்தல் வரும். அப்போது ஸ்டாலின் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார்.

தமிழகத்தில் ஆட்சி 25 ஆண்டுகள் ஸ்டாலின் கையில் தான் இருக்கும்.

கலைஞரை போல ஆளுமை திறன்மிக்கவர் ஸ்டாலின். அவருக்கு நிகர் யாரும் இல்லை.

இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தால் அடுத்து 25 ஆண்டுகள் திமுக நிலைக்கும்

இவ்வாறு அவர் பேசினார்.