Stalin performance in Kamal film is not surprising

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்றும் எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நாளை நடக்கும் என்றும் அதிமுக அணிகள் இணைப்பு குறித்து செய்தியாளரின் கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை, ராயபுரத்தில், நிதி மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 

அதிமுகவை முதலமைச்சர் சிறப்பாக வழி நடத்த வருகிறார். அனைவரும் ஒற்றுமையுடன் இருந்துதான் அரசை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நாளை நடக்கும். கமலுடன் இணைந்ததால் மு.க.ஸ்டாலினுக்கு கமலின் குணங்கள் ஒட்டிக் கொண்டுள்ளது.

கமல் இயக்கும் படத்தில், கூடிய விரைவில் ஸ்டாலின் நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கமலுடன் சேர்ந்து நடிப்பதால் ஸ்டாலினுக்கு சிறந்த நடிகருக்கான விருதை கொடுக்க வேண்டும்.

பாஜக தலைவர் அமித்ஷா, தமிழகம் வருவதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.