கொரோனாவல் உயிரிழந்த மருத்துவர்கள் பட்டியலை தமிழக மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட வேண்டும்.மரணங்களை மறைப்பது மரணங்களை தடுக்கும் வழியாக அமையாது என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

 "கொரோனாவால் எத்தனை தமிழக மருத்துவர்கள் இறந்தனர் என்பதை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பாரா? நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை 196 மருத்துவர்கள் பலியாகியுள்ளதாகவும், அதில் அதிகபட்சமாக மருத்துவர்கள் தமிழகத்தில் பலியாகியுள்ளதாகவும் இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  இவ்விவகாரத்தை பிரதமர் மோடி கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில், கொரோனா காலத்தில் தினமும் பல மருத்துவர்கள் உயிரிழந்து வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.இதுவரை இந்தியாவில் மரணம் அடைந்த மருத்துவர்கள் 175 பேர் என்றும் அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர் 43 பேர் என்றும் செய்தி வந்துள்ளது. அதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்தார். இந்தியா முழுவதும் இதுவரை 196 மருத்துவர்கள் இறந்துள்ளதாக இன்று ஐ.எம்.ஏ தகவல் தந்துள்ளது. இவர்களில் எத்தனை பேர் தமிழக மருத்துவர்கள் என்பதை அமைச்சர் அறிவிப்பாரா?மரணங்களைத் தடுக்கும் வழி என்பது மரணங்களை மறைப்பது அல்ல! 


கொரோனாவால் மரணம் அடைந்த மருத்துவர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. மேகாலயா ஹரியானா ஒடிசா பாண்டிச்சேரி ஜம்முகாஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மருத்துவர்கள் ஒருவர் மட்டுமே இறந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 23 மருத்துவர்கள் இறந்திருக்கிறார்கள்.இதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 20 மருத்துவர்கள் இறந்திருக்கிறார்கள்.