மோடி ,   தான் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம்... இதை செய்வோம்... என்று கதைவிட்டார். ஆனால்  மத்திய மோடி ஆட்சி வெறும் மோசடி ஆட்சியாக நடைபெறுகிறது. என திமுக செயல்  தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முரசொலி பவளவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், சமூக நீதியை காக்க வேறுபாடுகள், மாறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் அ.தி.மு.க.வில் ஏற்பட்டிருக்கும் பிளவை பயன்படுத்தி, காலூன்ற பா.ஜ.க. திட்டமிடுகிறது. அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால் எட்டா கனிக்கு கொட்டாவி விடுவதுபோல.. என்ற பழமொழியை தான் என கிண்டல் செய்தார்.

மோடி ,   தான் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம்... இதை செய்வோம்... என்று கதைவிட்டார். ஆனால்  மத்திய மோடி ஆட்சி வெறும் மோசடி ஆட்சியாக நடைபெறுகிறது என கூறிய ஸ்டாலின், மோடி ஆட்சியை அகற்றுவோம் என திட்டவட்டமாக கூறினார்.