staline is the next chief minister of tamilnadu...kanimozhi press meet

தமிழகத்தை ஆளும் திறன் திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது என்றும் அவர்தான் அடுத்த முதலமைச்சர் என்றும் அக்கட்சியில் எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக மகளிர் அணி சார்பில் தஞ்சாவூரில் கருணாநிதியின் 94 ஆவது பிறந்த நாள் விழா மற்றும் பெண்களுக்கு இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தமிழகத்தை ஆளும் தகுதி மற்றும் திறன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது என தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கு அவர் தான் அடுத்த முதலமைச்சர் என்றும் கனி மொழி கூறினார்.

இதை நானாக சொல்லவில்லை என்று தெரிவித்த அவர், ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

ஸ்டாலின் தான் அடுத்து ஆட்சிக்கு வரவேண்டும் என பெரும்பாலான மக்கள் விரும்புவதாகவும், அவரைத் தவிர வேறு யாரையும் முதலமைச்சராக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என கனிமொழி உறுதிபடத் தெரிவித்தார்.