எடப்பாடி விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கலைனா திமுக எடுக்கும்….  ஆவேசமான மு.க.ஸ்டாலின் !!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்னை இழந்தது குறித்து நடவடிக்கை எடுக்கும் பந்து ஆளுரிடம் இல்லாவிட்டால், திமுகவிடம் உள்ள பந்தைப் பயன்படுத்துவோம் என்று திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்று கருதுவதற்கு இடமில்லை. பந்து என் கோர்ட்டில் இல்லை என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்,

ஓபிஎஸ் தனது 11 ஆதரவு எம்.எல்.ஏ.-க்களுடன் ஆளுநரிடம் முன்பு கடிதம் கொடுத்தபோது, 15 தினங்களுக்குள் எடப்பாடி பழனிசாமியை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்ட ஆளுநர், இப்போது டிடிவி தினகரனின் எம்.எல்.ஏ.-க்கள் 19 பேர் கடிதம் கொடுத்திருக்கும்போது, அவர்களும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் என்பதால் நடவடிக்கை எடுக்க ஏன் மறுக்கிறார் என கேள்வி எழுப்பியுள்ளார்.

பெரும்பான்மையை நிரூபிக்கச் சொல்ல வேண்டிய ஆளுநர் பந்து என்னிடம் இல்லை என்கிறார். அதில் உண்மையில்லையென்றாலும், திமுகவிடமும் பந்து இருக்கிறது என்பதால்தான், அந்த பந்தை பயன்படுத்த எள் முனையளவும் திமுக தயங்காது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.