stalin campaign
சசிகலா அணியினர் ஜெயலலிதாவின் சாவை மறைத்து நாடகம் ஆடுகிறார்கள் என்றும் போயஸ் கார்டனில் ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டார் என வரும் செய்திக்கு இரு தரப்பினரும் ஏன் இதுவரை பதில் அளிக்கவில்லை எனவும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொதகுதி இடைத்தேர்தலில் திமு. சார்பில் போட்டியிடும் மருதுகணேசை ஆதரித்து அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் மேற்கொண்டார். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள பூண்டி தங்கம்மாள் தெருவில் அவர் பிரசாரத்தை தொடங்கினார்.
குறுகிய சாலைகளில் ஆட்டோ மூலமும், நடந்து சென்றும் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின்போது பேசிய அவர்,
திமுகவின் எதிரி வேட்பாளர்கள் முன்பு ஒன்றாக இருந்தார்கள் தற்போது இப்போது அவர்கள் 2 அணியாக பிரிந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
ஓபிஎஸ் மணல் மாபியா அணியாகவும், டி.டி.வி.தினகரன் பெரா அணியாகவும் பிரிந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இந்த இரு அணியினரும், ஒன்றாக இருந்தபோது ஊழல் செய்து மக்களை சீரழித்தார்கள். இப்போது தனித்தனியாக பிரிந்த பின்பு ஜெயலலிதா பெயரை சொல்லி ஓட்டு கேட்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா உடல் சவப்பெட்டியில் இருப்பதுபோல ஒரு மாதிரியை ஏற்பாடு செய்து ஓட்டு கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஸ்டாலின் பேசினார்,.

திமுகவுக்கு ஜெயலலிதா கொள்கை, லட்சியம், ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையில் தான் எதிரி. தனிப்பட்ட முறையில் நாங்கள் அவரை எதிரியாக நினைத்தது இல்லை என ஸ்டாலின் பேசினார்.
ஜெயலலிதாவால் தான் 3 முறை ஓபிஎஸ் முதலமைச்சராக்கப்பட்டார்.தற்போது இழந்த செல்வாக்கையும், பதவியையும் திரும்பப் பெறுவதற்காக ஜெயலலிதாவின் சவப் பெட்டியை வைத்துக் கொண்டு வாக்கு கேட்பதாக குற்றம்சாட்டினார்.
சசிகலா அணியினர் ஜெயலலிதாவின் சாவை மறைத்து நாடகம் ஆடுகிறார்கள். பதவியில் இருந்தபோது ஜெயலலிதா மரணம் குறித்து ஓபிஎஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய ஸ்டாலின், தற்போது பதவி போனபின் நாடகம் ஆடுகிறார் என்றார்.

விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி மலரும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஓபிஎஸ் அணியினர், சசிகலா அணியினர் என இரு தரப்பினரிடமும் ஜெயலலிதா சாவுக்கு நீதி விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
