மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விரைவில் பூரண நலம் பெற திமுக பொருளாளரும் தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 7-ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சுஷ்மா ஸ்வராஜ் விரைவில் பூரண குணமடைய மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மரியாதைக்குரிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மோசமான உடல் நிலையில் இருந்து விரைவில் மீண்டு பூரண நலம் பெற வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.