இந்தியாவிற்கும். பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் சீனா அல்லது எந்த மூன்றாம் தரப்பினரும் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்று இந்தியா கூறி வந்தாலும், வாங்கின் கருத்துக்களுக்கு இந்திய அதிகாரிகளிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் இந்த ஆண்டு சீனா தீர்த்து வைத்த பிரச்சினைகளில் ஒன்று என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியுள்ளார். மே மாத மோதம் நடைபெற்ற பஹல்காம் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீட்டை இந்தியா பலமுறை நிராகரித்திருந்தாலும், அமெரிக்காவிற்குப் பிறகு இதனை கூறும் முன்வைத்த முதல் நாடு சீனா.
பெய்ஜிங்கில் சர்வதேச நிலைமை மற்றும் சீனாவின் வெளிநாட்டு உறவுகள் குறித்த கருத்தரங்கில் பேசும்போது வாங் இதனை தெரிவித்தார். உலகில் மோதல்களும் உறுதியற்ற தன்மையும் வேகமாக அதிகரித்துள்ளதாக வாங் கூறினார். இந்த ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு உள்ளூர் மோதல்களும் எல்லை தாண்டிய மோதல்களும் அடிக்கடி நிகழ்ந்தன.
ஆனாலும், மே 7-10 தேதிகளில் பாகிஸ்தானுடனான மோதல் இரு நாடுகளின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் ஜெனரல்கள் இடையேயான நேரடிப் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட்டது என்ற இந்தியா கூறியுள்ள நிலையில் வாங்கின் பேச்சு முரணாக உள்ளது.
நீடித்த அமைதியைக் கட்டியெழுப்புவதில் சீனா கவனம் செலுத்துகிறது என்று அவர் வலியுறுத்தினார். "சீனாவின் அணுகுமுறைக்கு ஏற்ப, உலகம் முழுவதும் ஹாட்ஸ்பாட் பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் பணியாற்றியுள்ளோம்" என்று வாங் கூறினார். "வடக்கு மியான்மரில், ஈரானிய அணுசக்தி பிரச்சினை, பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான பதட்டங்கள், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையேயான பிரச்சினைகள், கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையேயான சமீபத்திய மோதல் ஆகியவற்றில் நாங்கள் மத்தியஸ்தம் செய்துள்ளோம்" என்று அவர் கூறினார்.
இந்த மே மாதம் இந்தியாவிற்கும். பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதில் சீனா அல்லது எந்த மூன்றாம் தரப்பினரும் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்று இந்தியா கூறி வந்தாலும், வாங்கின் கருத்துக்களுக்கு இந்திய அதிகாரிகளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக மே 7 அன்று பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தளங்கள் மீது இந்தியா இராணுவத் தாக்குதல்களை நடத்தியது, இது மே 10 அன்று முடிவடைந்த ஒரு குறுகிய ஆனால் தீவிரமான மோதலைத் தூண்டியது.

