Stalin will be the Chief Minister - vaiko has a duty

இராமநாதபுரம்

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதலமைச்சராக்குவதே என் கடமை என்று வைகோ தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம், பெருநாழியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பங்கேற்றார். 

அப்போது அவர் பேசினார். அதில், "தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறுகிறது. 

செப்டம்பர் 15–ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும்.

தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. 

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவதே என் கடமை. முதலமைச்சராக ஸ்டாலினை ஆக்கியே தீருவோம். இதற்காக கடுமையாக பாடுபடுவேன்" என்று அவர் பேசினார்.