Stalin was ready to publish an account of his property? Tamilisai
பாஜக ஒருபோதும் தமிழகத்தில் தலை தூக்க முடியாது என ஸ்டாலின் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சொத்துகணக்கை வெளியிட தயாரா என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அதிமுக அழிந்து விட்டது, திமுக அழிந்து கொண்டு இருக்கிறது என கருத்து தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்து பேசிய ஸ்டாலின் திமுகவை அளிக்க நினைத்தவர்கள் அரசியலில் முகவரி இல்லாமல் போயுள்ளனர். பாஜகவால் தமிழகத்தில் எப்போதும் தலை தூக்க முடியாது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழிசை சவுந்திரராஜன் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :
எத்தனை குட்டிகரணம் போட்டு திமுகவை வளர்த்தார்கள் என எல்லோருக்கும் தெரியும், அதைவிட நன்றாக குட்டிகரணம் போட்டு எங்களாலும் பா.ஜ.வை வளர்க்க முடியும்.
நாங்கள் அடித்தட்டு மக்களுக்காகவும், அவர்களது பிரச்சனைகளுக்காகவும் பாடுபட்டு பட்டு கொண்டிருக்கிறோம்.
பா.ஜ.க நிர்வாகிகள் சொத்து கணக்கை காட்ட தயாராக இருக்கிறோம். அதேபோல், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் சொத்துகணக்கை வெளியிட தயாரா?
அப்போது தெரியும் எது அடித்தட்டு கட்சி? எது மேல் தட்டு கட்சி என்பது
இவ்வாறு தமிழிசை பேசினார்.
