கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்.. இதை செய்ய முதல்வருக்கு தைரியம் இருக்கா? திமுகவை அலறவிடும் H.ராஜா.!
சேலத்தில் ஸ்டாலின் பொதுக்கூட்டத்தால் ஒமிக்ரான் பரவாதா?. கிறிஸ்துமஸிற்கு யாரும் சர்ச்சில் வழிபாடு செய்யக்கூடாது எனக் கூற தைரியம் இருக்கிறதா? இது இந்து விரோத தீய ஆட்சி. பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களின் வாக்குகளை பிக் பாக்கெட் அடித்து ஆட்சிக்கு வந்துவிட்டனர். தமிழகத்தில் இந்துக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு சர்ச்சுகளுக்கு வரக்கூடாது என இந்து விரோத அரசு உத்தரவிட தைரியம் இருக்கிறதா என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
கரூர் வெண்ணெய்மலையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அக்கட்சியின் முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- முதல்வர் ஸ்டாலினை விமர்சனம் செய்தால் அவர்களுக்கு சிறைவாசம். அந்த மாதிரி எதிர்ப்பு குரலை நசுக்குகின்ற ஆட்சிக்கு கன்னத்திலேயே வலுவான அரை விழுந்துள்ளது. மாரிதாஸ் கைதை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இனிமேலாவது தமிழக அரசு ஒழுங்காக நடந்து கொள்ளவேண்டும்.
பாரத பிரதமர் தமிழக வந்த போது கோ பேக் மோடி சொல்லி கருப்பு பலூன் விட்ட சமூக விரோத, தேச விரோத தீயசக்திகள். சமூக, தேச விரோத சக்திகள் சேர்ந்து ஒரு கட்சியை ஆட்சியில் அமரவைத்துள்ளது. கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர் எனக் கூறினேன். கருணாநிதி யார் கருத்து சொன்னாலும் கேட்டு கொண்டு அவரே முடிவு எடுப்பார். ஆனால், ஸ்டாலின் அரசு இதுமாதிரியான போராட்டக்குழுக்களால் நடத்தப்படுகிறது. கும்பகோணம், காஞ்சிபுரம் என தொடர்ந்து இந்து கோயில்களை இடிக்கிற ஆட்சியாக இந்த ஆட்சி இருந்து வருகிறது. இந்த ஆட்சி பொறுப்பேற்ற 7 மாதத்தில் ஸ்ரீபெரும்புத்தூரில் பட்டா நிலத்தில் உள்ள கோயில்களை இடித்துள்ளனர். ஆனால், கோயில் நிலத்தில் உள்ள கிறிஸ்தவ வணிக வளாகத்தை இடிக்கவில்லை.
100 சதவீதம் இந்துக்களுக்கு எதிரான அரசாங்கம். இந்துக்களுக்கு எதிரான மாநில பயங்கரவாதம் இங்கு உள்ளது. இந்துக்கள் வழிபாடுகளை உரிய முறையில் செய்ய முடியவில்லை. திருச்செந்தூர் வந்த பக்தர்களை போலீசார் தாக்குகின்றனர். திருவண்ணாமலையில் கிரிவலம் செய்ய அனுமதியில்லை. சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனத்திற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. இந்து விரோத அரசு இது.
சேலத்தில் ஸ்டாலின் பொதுக்கூட்டத்தால் ஒமிக்ரான் பரவாதா?. கிறிஸ்துமஸிற்கு யாரும் சர்ச்சில் வழிபாடு செய்யக்கூடாது எனக் கூற தைரியம் இருக்கிறதா? இது இந்து விரோத தீய ஆட்சி. பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களின் வாக்குகளை பிக் பாக்கெட் அடித்து ஆட்சிக்கு வந்துவிட்டனர். தமிழகத்தில் இந்துக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் இந்துகளுக்கு ஏற்பட்டது போல தமிழகத்தில் இந்த அரசாங்கம் ஏற்படுத்துகிறது. கரூரில் 2 மாணவிகள் தற்கொலை தொடர்பாக ஏன் யாரையும் கைது செய்யவில்லை என எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.