Asianet News TamilAsianet News Tamil

மருத்துவ படிப்பு இடஒதுக்கீடு அரசாணையை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்ய நினைக்கிறார்..! முதல்வர் குற்றச்சாட்டு.!!

வைகை குண்டாறு திட்டம் செயல்படுத்தப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் நிறைப்பட்டு இருக்கிறது.இதை வைத்துக்கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்ய நினைக்கிறார் என குற்றம் சாட்டியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
 
Stalin wants to do politics by keeping the medical education reservation order ..! Chief Minister accused. !!
Author
Tamilnadu, First Published Oct 30, 2020, 10:02 AM IST

வைகை குண்டாறு திட்டம் செயல்படுத்தப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு அதிமுக ஆட்சியில் நிறைப்பட்டு இருக்கிறது.இதை வைத்துக்கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்ய நினைக்கிறார் என குற்றம் சாட்டியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Stalin wants to do politics by keeping the medical education reservation order ..! Chief Minister accused. !!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 113 வது ஜெயந்தி விழாவையொட்டி  மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி , துணை  முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள்   மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அவரது பிறந்த நாளான இன்று தேவர் ஜெயந்தி குரு பூஜையாக கொண்டாடப்படுகிறது.

Stalin wants to do politics by keeping the medical education reservation order ..! Chief Minister accused. !!

இவ்விழாவையொட்டி, மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்.  அதை தொடர்ந்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் செல்லூர் ராஜூ,  காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அதன் பிறகு,  அங்கிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி   விழாவின்போது ஆண்டு தோறும்  நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதுரை  கோரிப்பாளையம் தேவா் சிலைக்கு திரளான பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வருவது வழக்கம்.  கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இருந்த போதிலும்  பொது மக்கள்,  வந்து மரியாதை செலுத்தினர்.  பெண்கள் பால் குடம் எடுத்து வந்தனர்.தென்மண்டல ஐஜி முருகன் தலைமையில்  மதுரை மாவட்டத்தில், 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Stalin wants to do politics by keeping the medical education reservation order ..! Chief Minister accused. !!

இதன் பிறகு செய்தியாளர்ககளை சந்தித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... அப்போது பேசியவர்... இராமநாதபுரம் மாவட்டத்தை சுற்றி ஏராளமான குளங்கள் கண்மாய்கள் இருக்கின்றன.அதனால் நீண்ட நாள் கனவுதிட்டமான வைகை குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும்.கிராமப்புற மாணவர்கள் மருத்துவப்படிப்பில் இடம் பெற வேண்டும் என்பதற்காக இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியிருக்கிறோம். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.யாரும் எங்களுக்கு கோரிக்கை வைக்கவில்லை. எங்கள் கோரிக்கை நிறைவேறியிருக்கிறது என்கிறார் ஸ்டாலின். அவர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. அதிமுக அரசு கிராமப்புறமக்களின் வளர்ச்சி அக்கறை கொண்டுள்ளது. இதை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்ய நினைக்கிறார் அது நடக்காது என்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios