திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சென்னை கொளத்தூர் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது தலைசுற்றல் காரணமாக தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் தகவலில் உண்மை இல்லை என அக்கட்சித் தலைமை மறுத்துள்ளது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஓரிரு நாட்களாக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இந்நிலையில் இன்று காலையும் நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார் அப்போது அவருக்கு தலை சுற்றல் ஏற்பட்டது இதனால், உடனடியாக அப்பகுதியில் உள்ள குமரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சில ஊடங்கங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவின. இதனால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்து விசாரிக்க தொடங்கினர்.

இதையடுத்து திமுக தலைமை இதை முற்றிலும் வதந்தி என மறுத்துள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி என்று தகவல் தவறானது என்று திமுக தலைமை விளக்கம் அளித்துள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.