There were various irregularities in the medical report she submitted to the Opposition leader MK Stalin said of the suspect.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து எய்மஸ் மருத்துவமனை சார்பில் நேற்று விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் அப்போலோ மருத்துவமனைக்கு வரும் போது அவர் சுயநினைவு இல்லாமல் இருந்ததாக் குறிப்பிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போயஸ் இல்லத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டரா என்று தமிழ் நாளிதழ்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டன.

இந்தச் சூழலில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “ஜெயல்லிதா சிகிச்சை கு|றித்த மருத்துவ அறிக்கை வேடிக்கையாக உள்ளதாவும், அதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
