சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து ஏராளமானோர் திமுக பொருளாளர் முக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டாலின் பேசும்போது,

முதலமைச்சர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதை அரசியலாக்கி நான் பேசுவதாக யாரும் கருதி விடக்கூடாது தெரிவித்த ஸ்டாலின், முதலமைச்சர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்வதற்கு முன்னால் இருந்த நிலையை சொல்வதாகவும், அன்றைய நிலையை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.



அதிமுக ஏற்கனவே 5 வருடம் ஆட்சியில் இருந்தபோது தமிழ் நாட்டு மக்களுக்கு நன்மை எதையாவது செய்திருக்கிறார்களா? தமிழகத்தில் ஏதாவது வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறதே தவிர, நிறுத்தி வைக்கப்பட்டவில்லை. உள்ளாட்சி தேர்தலை நிறுத்த வேண்டுமென்று திமுக வழக்கு தொடரவில்லை என்றும், தேர்தல் முறையாக நடைபெற வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் அதிகாரத்தில் இருப்பவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நடைபெறக்கூடாது, தேர்தல் ஆணையம் ஜனநாயக முறைப்படி, கட்சிப் பாகுபாடு இல்லாமல் தேர்தலை நடத்திட வேண்டும் என வழக்கு தொடர்ந்ததாக தெரிவித்தார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை திராவிட முன்னேற்ற கழகம் பெற்றிட திமுகவினர் துணை நிற்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொல்வதாக ஸ்டாலின் தெரிவித்தார்.