மிசாவில் கைது செய்யப்பட்டது குறித்து கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் தியாகம், சிறை, சித்ரவதை என்னவென்றே தெரியாதவர்களுக்கு என்னைப்பற்றி பேச தகுதி இல்லை என கடுமையாக பதில் அளித்தார்.
தருமபுரியில் பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான விளக்கக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசினார். அப்போது, நான் கொலை, கொள்ளை, ஊழல் செய்துவிட்டு சிறைக்கு செல்லவில்லை.
மக்கள் நலனுக்காக சிறை சென்றேன். தியாகம், சிறை, சித்ரவதை என்றால் என்னவென்றே தெரியாதவர்களுக்கு என்னைப்பற்றி பேச தகுதி இல்லை என கடுமையாக பேசினார்.
.
தமிழகத்தில் பொய் சொன்னது போதாது என்று லண்டன், அமெரிக்கா சென்று பொய் சொல்கிறார்கள். தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்பது போல என்னை விமர்சித்து வருகிறார்கள்.
காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல் திமுகவை விமர்சிக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள அதிமுக ஆட்சி, மத்தியில் உள்ள பாஜக ஆட்சியை யாரும் விமர்சனம் செய்வதில்லை.
உலக முதலீட்டாளர்கள் யாருக்கும் இந்த ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லை. தமிழக முதலமைச்சர் வேலைவாய்ப்பு திட்டங்களை பொய்யாக அறிவித்து வருகிறார் என அந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் அதிரடியாக பேசினார்..
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Nov 16, 2019, 10:31 PM IST