Asianet News TamilAsianet News Tamil

இவரு ஜெயிச்சா கருணாநிதி ஜெயிச்ச மாதிரி !! யாரைச் சொன்னார் மு.க.ஸ்டாலின் ?

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திருமாவளவனை வெற்றி பெற வைப்பது, கருணாநிதியை வெற்றி பெறச்செய்வது போலாகும் என்றும்,  கருணாநிதி இன்று நம்மிடத்தில் இல்லை என்றாலும்,  அவா் இல்லாத நிலையில், அவரது மகனாக நான் ஆதரவு கேட்கிறேன் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
 

stalin speech in chidambaram
Author
Chidambaram, First Published Apr 12, 2019, 11:25 PM IST

வரும் 18 ஆம் தேதி தமிகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்லும் நடைபெறவுள்ளன.

சிதம்பரம் கீழரத வீதியில் இன்று நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை ஆதரித்து மு.க.ஸ்டாலின் பேசினார். 

stalin speech in chidambaram

அப்போது ஒரு ஆட்சி எப்படி நடைபெறவேண்டும் என்பதற்கு திமுக ஆட்சி சாட்சி. எப்படி நடைபெறக்கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சியே சாட்சி என 
எதிர்வரும் மக்களவைத் தேர்தல் மோடி தலைமையிலான சர்வாதிகார ஆட்சிக்கு முடிவு கட்டும் தேர்தல். இத்தொகுதியில் திருமாவளவனை வெற்றி பெற வைப்பது, கருணாநிதியை வெற்றி பெறச்செய்வதாகும் என தெரிவித்தார்.

கருணாநிதி இன்று நம்மிடத்தில் இல்லை. அவா் இல்லாத நிலையில், அவரது மகனாக நான் ஆதரவு கேட்கிறேன். தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி தானாக போய்விடும் சூழல் உருவாகி உள்ளது. மத்தியில் ஆளும் பிரதமர் மோடி ஒரு சா்வாதிகாரி. மாநிலத்தில் ஆளும் எடப்பாடி உதவாக்கரை என கடுமையாக குற்றம்சாட்டினார்.

stalin speech in chidambaram

5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஆட்சியில் ஏழை எளிய மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள் மற்றும் தமிழக மக்களுக்கு பல என்னற்ற திட்டங்களை செயல்படுத்தினார். கருணாநிதி உதவும் கரமாக இருந்தார். எடப்பாடி உதவாகரையாக  இருந்து கொண்டிருக்கிறார். 

விவசாயிகள், நெசவாளா்களுக்கு இலவச மின்சாரம். விவசாய கடன் ரத்து, அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள், நமக்கு நாமே திட்டம். சமத்துவப்புரம், மினிபேருந்து உள்ளிட்ட பல திட்டங்களை நிறைவேற்றிய ஆட்சி கருணாநிதி ஆட்சி என்று தெரிவித்தார்.

stalin speech in chidambaram

நான் ஒவ்வொரு கூட்டத்திலும் ஜெயலலிதா மா்ம மரணம், கொடநாடு விவகாரம், பொள்ளாட்சி பாலியல் சம்பவம் குறித்த 3 கேள்விகள் கேட்டு வருகிறேன். அதற்கு பதில் சொல்ல மறுக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

இந்த மூன்றும்  பெண்கள் சம்பந்தப்பட்டது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios