40 நிமிடத்துக்கும் மேலாக சட்டபேரவையில் அமளி நீடித்த நிலையிலும் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பேசி வருகின்றனர்.
தொடர்ந்து உறுதிப்படுத்தப்ப்படாத தகவல்கள் வெளியே பரவி கொண்டிருக்கின்றன.
ஒரு நிருபரை கூட உள்ளே அனுமதிக்காததால் சட்டமன்ற காவலர்கள் ஊழியர்கள் அவ்வப்போது தெரிவிக்கும் தகல்களை கொண்டு நிருபர்கள் செய்தி தருகின்றனர்.

மற்றபடி அனைத்துமே உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தான் வெளிவருகின்றன.
கூட்டம் தொடங்கியதிலிருந்தே திரை மறைவு ஒப்பந்தம் போடப்பட்டது போல ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக ஸ்டாலினும் திமுக உறுப்பினர்களும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
ஸ்டாலின் தனக்கு கொடுக்கப்பட்ட வைப்பின் போது பேசினார்.
ஓ.பன்னீர்செல்வம் தன்மானத்தோடு சசிகலா குடும்பத்தை எதிர்த்து வெளியே வந்துள்ளார்.
அவர் ஒரு தன்மான சிங்கம் என பாராட்டு தெரிவித்தார். ஸ்டாலினின் இந்த பாராட்டுக்கு திமுக மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலத்த குரல் எழுப்பி ஆதரவளித்தனர்.
இதை பார்த்து கொண்டிருந்த சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் வாயடைத்து போய் அமைதியாக இருந்தனர்.
