stalin speech about rajini speech
தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் பேசியது குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்ததற்கு சமூக விரோதிகளே காரணம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு எதிர்ப்புகளும் கண்டனங்களும் வலுத்துள்ளன.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அமைப்பினரும் ரஜினியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரின் உண்மையான அரசியல் வருகை நேற்று நடந்திருக்கிறது என்றும். அவரின் அரசியல் யாருக்கு நன்மை செய்யும் என நேற்றைய பேச்சில் தெரிந்து விட்டது என பலரும் குறைபட்டுக் கொண்டார்கள்.
இந்நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ரஜினியின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். திமுக செயல்தலைவர் ஸ்டாலின் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ரஜினி பேசியது அவரது குரலா? பாஜக அல்லது அதிமுகவினுடையதா என்பது சந்தேகமாக உள்ளது எனக் கூறியவர்.
போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை. ஜல்லிக்கட்டு அனுமதிக்கு போராட்டம் மூலமே தீர்வு காணப்பட்டது என்பது ரஜினிக்கு தெரியும். சமூக விரோதிகள் யார் என்று தெரியும் என்ற ரஜினி நாட்டிற்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும். சமூக விரோதிகளை ரஜினி அடையாளம் காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
