தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தால் அ.தி.மு.க. ஆட்சி கலையும என்றும் அதைத் தொடர்ந்து மக்கள் இந்ம ஆட்சியை மக்களே தூக்கி எறிவார்கள் என திமுக செயல் தலைவர் : மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தி.மு.க. ஈரோடு மண்டல மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. 2-ம் நாள் மாநாடு நேற்று  முன்தினம் காலை இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.  இந்த மாநாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத் தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், தமிழக அரசியலில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. அறிவியல்படி வெற்றிடம் உடனடியாக நிரப்பப்பட்டு விடும். எனவே வெற்றிடம் எதுவும் இல்லை.

தி.மு.க.வில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. ஊழல் நிறைந்த இந்த ஆட்சி இன்னும் ஒருவாரத்தில் இருக்காது. இந்த ஆட்சியை கலைத்து நாம் ஆட்சியை பிடிக்கப்போவது இல்லை என தெரிவித்தார்.

சொடுக்கு போடும் நேரத்தில் ஆட்சியை கலைக்க முடியும். ரூ.3 கோடி தருகிறேன் என்றால் வரப்போகிறார்கள். ஆனால் பணம் கொடுத்து ஆட்சியை பிடித்தால் மக்களைப்பற்றி சிந்திக்க முடியுமா? எனவே நாம் ஆட்சியை கலைக்க மாட்டோம் என்றார்.

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வரும். தீர்ப்பு வந்தால் ஆட்சி கலையும். 6 மாதம் கவர்னர் ஆட்சி. அடுத்து பொதுத்தேர்தல். யாருடைய தயவும் இன்றி முழு பலத்துடன் ஆட்சியில் அமர்வோம். அதற்கு பின்னர் 30 ஆண்டுகள் யாரும் நம்மை அசைக்க முடியாத என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.