திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு பல்வேறு அரசியல் கட்சிகள் அடுத்து திமுகவில் என நடக்கும்..? கட்சி உடையுமா...அழகிரி விடுவாரா..? மீண்டும் அழகிரி அரசியலில் களம் இறங்க உள்ளாரா...? கட்சியில் அழகிரிக்கு முக்கிய பொறுப்பு எனவெல்லம் பேசப்பட்டு வந்தது.

இதற்கு இடையில், அழகிரி அவருடைய பேஸ்புக் பக்கத்தில், அரசியல் களம் காணும் ஹீரோ போன்று,  பழைய வீடியோக்களை வைத்து, எடிட் செய்து, புது வரிகளுடன் பாடலுடன் கூடிய வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதற்கு பின் திமுக வில் சலசலப்பு காணப்பட்டது. இந்நலையில், திமுக செயல் தலைவர்  ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

 அதில், 

"சூரியன் இல்லாத வானமாக, சொற்கள் தொலைத்த மொழியாக, மாலுமி இல்லாத கப்பலாக, தாயை இழந்த பிள்ளையாகத் தலைவர் கலைஞரை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் கழகத்தின் கோடி உடன்பிறப்புகளில் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்றே தெரியாமல் இன்னமும் வேதனைக் கடலில் எல்லோரது மனதும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

மதவெறியை விதைத்து, மாநில உரிமைகளை பறித்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஈறைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்கலமா என நப்பாசை கொண்டிருக்கிறார்கள். தலைவரை இழந்த திமுகவில் என்ன நடக்கிறது என்பதில் நம்மை விட அரசியல் எதிரிகளுக்கு அதிக அக்கறை. நான் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டவன். சலசலப்புகளுக்கு அஞ்ச மாட்டேன். கழகத்திற்கு உள்ளும் புறமும் உருவாக்கப்படும் சவால்களை வென்றுகாட்டுவேன், கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாம் உங்களின் துணையோடு! 

இவ்வாறு ஸ்டாலின் அறிக்கை விட்டுள்ளது அழகிரிக்கு சரியான பதிலாக இருக்கும் என்றும், திமுக வை  தேவை இல்லாமல் விமர்சனம் செய்பவர்களுக்கு, ஸ்டாலின் அறிக்கை தக்க பதிலாக உள்ளது என்றும் திமுக தொண்டர்கள் விமர்சனம் செய்கின்றனர்.