stalin slams edappadi palanisamy

விளம்பரப் பிரியரான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் சுய லாபத்துக்காகத்தான் மேட்டுர் அணை தூர்வாரும் திட்டத்தை தொடங்கி வைத்தார் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்கள் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியில் உள்ள குளம் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.. 

இதனை நேரில் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளம்பரத்துக்காகவே மேட்டூர் அணை தூர்வாரும் திட்டத்தை தொடங்கி வைத்ததாக தெரிவித்தார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது ஒன்றாக இருந்த அதிமுக பின்னர் இரண்டாக உடைந்தது என்றும் தற்போது அதிமுக மூன்றாக உடைந்து விட்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதே நிலை நீடித்தால் வரும் ஜுன் 14 ஆம் சட்டப் பேரவை கூடுமா ? அதிமுக ஆட்சி நிலைக்குமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார்.