ஜெயலலிதா ஒரு கொள்ளைக்காரி.. தரம் தாழ்ந்து விமர்சித்த ஆ.ராசாவை சல்லி சல்லியாக நொறுக்கிய அம்மாவின் வழக்கறிஞர்.!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு குறித்து ஆ.ராசாவுடன் விவாதிக்க நான் தயார் என வழக்கறிஞர் ஜோதி கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு குறித்து ஆ.ராசாவுடன் விவாதிக்க நான் தயார் என வழக்கறிஞர் ஜோதி கூறியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் கடந்த 1ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்தபோது "2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்த கட்சி திமுக என்று விமர்சித்தார். மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன் போல் பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் அலைக்கற்றை வழக்கில் சிக்குவார்" எனச் சாடினார்.
இதற்குப் பதில் அளித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, 2ஜி குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். நான் சவால் விட்டும் இன்னும் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பதில் வரவில்லை. உங்களுக்கு அசிங்கமாக இல்லையா? நீங்கள் வகிக்கும் பொறுப்புக்கு இது அழகா? உங்காத்தா ஊழல் செய்து ஜெயிலுக்கு போனவர் என்று சொன்னேன். அரசியல் சட்டத்தை தவறாக பயன்படுத்தி படுகொலை செய்த மன்னிக்க முடியாத கொள்ளைக்காரி.
கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்ககவே சசிகலாவை, சுதாகரனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து புதிய புதிய கம்பெனிகளை உருவாக்கி பல நூறு கோடி ரூபாய்களை கொள்ளையடித்தவர் ஜெயலலிதா. அரசியலில் ஜெயலலிதா இருந்தது அசிங்கம் என நான் சொல்லவில்லை. உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. இதற்கு என்ன பதில்? என நான் கேட்டேன். அப்படிப்பட்ட ஆத்தா படத்தையே தூக்கிக் கொண்டு திரிகிறாயே..? அப்படியானால் ஆத்தா மாதிரியே ஊழல் செய்வேன்... ஆத்தா மாதிரியே ஊழல் செய்வேன் என்று அர்த்தமா?’’என ஆ.ராசா பேசியுள்ளது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஜோதி பேட்டியளிக்கையில்;- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தரம் தாழ்ந்து அவதூறாக பேசி வருவது கண்டனத்துக்குரியது. ஜெயலலிதா வழக்கில் தவறான தகவல்களை கூறி வருகிறார்.ஜெயலலிதா அசியலமைப்பு சட்டத்தை மீறியவர், கொள்ளைக்காரி என தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆ.ராசா குறிப்பிட்டதை போல ஜெயலலிதாவை உச்சநீதிமன்றம் விமர்சிக்கவில்லை. ஜெயலலிதா இறந்தவுடன் இறப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் தந்திருந்தால் தீர்ப்பில் ஜெயலலிதா பெயர் வந்திருக்காது. ஜெயலலிதா இறப்பு சான்றிதழை சசிகலா தரப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு குறித்து ஆ.ராசாவுடன் விவாதிக்க நான் தயார் எனவும் ஆ.ராசாவுக்கு வழக்கிறஞர் ஜோதி சவால் விடுத்துள்ளார். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி எனக்கு தெரியும் என்பதால் நான் பதில் கூறுகிறேன் என தெரிவித்துள்ளார். ஆ.ராசா 2ஜி வழக்கில் இருந்து விடுதலையானது போலவே ஜெயலலிதாவும் வழக்கில் இருந்து விடுதலையாகிவிட்டார். தரம் தாழ்ந்து பேசிய ஆ.ராசாவை திமுகவில் இருந்து ஸ்டாலின் நீக்க வேண்டும். ஜெயலலிதா என்னை வெளியேற்றவில்லை. நான் வெளியேற்றப்பட்டன். என வழக்கறிஞர் ஜோதி கூறியுள்ளார்.