விருதுநகரில் தற்போது நடைபெற்று  வரும் திமுக தென் மண்டல மாநாட்டில் உரை நிகழ்த்தி வருகிறார். அப்போது ஆளும் அதிமுக ஆட்சிக்கு எதிராகவும், இன்று நடைபெற்ற பாஜக அதிமுக பிரச்சார கூட்டத்தில் மோடி ஆற்றிய உரைக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும், அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அப்போது, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக அறிவித்த ஒன்று.. ஆனால் இந்த ஐந்துஆண்டு காலத்தில் எதுவும் செய்யாமல், சமீபத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடத்தி விட்டு சென்று உள்ளார் மோடி...அது அடிக்கல் நாட்டு விழா அல்ல அடிக்கல் நாட்டு நாடகம்....


 
நீட் தேர்வு விளக்கம் கேட்டோம் ..அதற்கு பதில் இல்லை. சட்ட மன்றத்தில் இரண்டு முறை தீர்மானம் போட்டு அனுப்பி வைத்தோமே என்னாச்சு..? இதுவரை எந்த பதிலும் இல்லை..

கஜா புயலால் பெரும் பாதிப்பு எற்பட்ட போது மாநில அரசு கேட்ட தொகையை  மத்திய  அரசு வழங்கியதா..? சேலம் உருக்காலை விஷயம் என்னாச்சு ..? தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான நிதியை  முறையாக வழங்கி உள்ளதா..? கீழடி ஆய்வுக்கு தடை ஏன் ..? சேது சமுத்திரம் திட்டம் இப்ப என்ன நிலையில் உள்ளது..? சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் அறிவிக்கப்படும் என்றார்களே... அதன் நிலைப்பாடு தான் என்ன..? 

தமிழக மீனவர்களை அவ்வப்போது கைது செய்து கொடுமை செய்கின்றனர்.. இதற்காக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது? இதற்கெல்லாம் பதில் சொல்வாரா மோடி என அடுக்கடுக்கான கேள்விகளை அடுக்கினார் ஸ்டாலின்.
 
மீண்டும் தமிழகம் வருவார் மோடி 

இன்று பிரச்சார கூட்டத்தில் சீன் போட்டு விட்டு சென்று விட்டார் மோடி..எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழ் நாட்டிற்கு வருகிறீர்கள் என்பது தான் என்னுடைய கேள்வி..

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், இம்மண்ணுலகை விட்டு மறைந்தார் ஜெயலலிதா அவர்கள். ஆனால், அன்று மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போதெல்லாம் வராமல், இரண்டு ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் மறக்காமல் எந்த கூட்டத்திற்கு வந்தாலும் ஜெயலலிதாவின் படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகிறார். எங்கிருந்து வந்தது  இந்த திடீர் பாசம்..?  

இவர் இப்ப மட்டுமல்ல..மீண்டும் மீண்டும் தமிழகத்திற்கு வந்து சீன் போட்டு செல்வார் மோடி என பாஜக அதிமுக பிரச்சார கூட்டத்தை குறி வைத்து தாக்கி பேசி உள்ளார் ஸ்டாலின்