சென்னை  மற்றும் அண்ணா பல்கலைக்கழகங்களில் புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஊழல் சர்ச்சையில் சிக்கிய  துணைவேந்தர்கள் சிலரை மேற்கோள் காட்டி வருந்தியும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின். அதில் ‘அதிர்ச்சியாக இருக்கிறது, பேரதிர்ச்சியாக இருக்கிறது!’ என்றெல்லாம் மாணவர் சமுதாயத்துக்காக உருகியிருக்கிறார். 

இதை வாசித்துவிட்டு அரசியல் விமர்சகர்கள் ஒரு பதிவை உடனடியாக மேற்கொண்டுள்ளனர். அதில்...’’அ.தி.மு.க. அரசில் உயர்கல்வித்துறை சீர்கேடால் மாணவர்கள் படும் துயரத்துக்காக வருந்துகிறீர்கள் சரி. 

உங்களது ஆட்சியில் எல்லாம் நலமா? உங்கள் அரசின் காவல் நாயகனாக இருந்த அப்போதைய கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் மகன், பல பல்கலைக்கழகங்களுக்கு சி.சி.டி.வி. உபகரணம் வாங்கிய வழக்கில் கோடிக்கணக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதான புகாரில் சில வருடங்களுக்கு முன் சிக்கினாரே அது நினைவிருக்கிறதா தளபதி? பல பல்கலைகழகங்களின் துணை வேந்தர்களை கைக்குள் போட்டுக் கொண்டு அவர் அந்த முறைகேடை  நிகழ்த்தியதாக துணைவேந்தர்கள் மீதும் புகார் மடல் வாசிக்கப்பட்டதை மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம். 

உங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.வான மாலைராஜா, நெல்லையிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரை அடித்தார் என்று எழுந்ததே பெரும் பரபரப்பு? அது யார் ஆட்சியில் என்பது நினைவிருக்கிறாதா!
உங்கள் ஆட்சியில் நியமிக்கப்பட்ட பல துணைவேந்தர்களின் லட்சணங்களை பட்டியலிட்டால் பூமி பொறுக்காது. 

ஆக உங்கள் ஆட்சியில் நடந்தால் அது சட்னி டிஸைனில் சாதாரணம், அவங்க ஆட்சியில் நடந்தால் அது டெரரான ரத்தமா?
என்னாங்க சார் உங்க தீர்ப்பு?”_ என்று நச்சென்று கேட்டுள்ளனர்.  நியாயம்தானே!?