2019 மக்களவை தேர்தலுக்காக அதிமுகவுடன் பாமக ஒப்பந்தம் செய்துகொண்டது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இன்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்தக் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், ’’அதிமுகவின் கதை என்று புத்தகம் போட்டவர் ராமதாஸ். அன்று புத்தகம் போட்டுவிட்டு இன்று கூட்டணி வைத்துள்ளார். 

அதிமுகவின் கதை புத்தகத்தில் ஜெயலலிதா, எடப்பாடி எல்லோரையும் கடுமையாக விமர்சித்த அந்த பெரிய மனிதர் ராமதாஸ் இன்று அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு கையெழுத்து போடுகிறார். ராமதாஸுக்கு வெட்கம் இல்லை. சூடு, சொரணை இல்லை. அதிமுக - பாமக ஏற்கனவே கூட்டணி வைத்து தோற்றுப்போனார்கள். ராமதாசுக்கு நாட்டைப்பற்றி கவலை இல்லை. பணத்தைப் பற்றிதான் கவலை’’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.