வதந்திகளை நம்ப வேண்டாம்....திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்...

கருணாநிதி உடல் நலம் பற்றி பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின், தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவலை அடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள்,பிரபலங்கள் என கோபாலபுரம் இல்லத்திற்கு விரைந்து வருகின்றனர்.

நேற்று மாலை முதலே, கோபாலபுரம் இல்லத்திற்கு துரைமுருகன், அன்பழகன் முதல் இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்,மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரை ஒவ்வொரு தலைவராக கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

ஆனால் மருதுவர்களின் அறிவுரை படி, இவர்கள் யாரையும், கருணாநிதியை பார்க்க அனுமதிக்க முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், திமுக செயல் தலைவரை சந்தித்து கலைஞரின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் உடல் நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றுடன் 50 ஆவது ஆண்டில் தன்னுடைய அரசியல் பயணத்தை தொட்டு உள்ளார் கலைஞர்.

இது ஒரு பக்கம் இருக்க, கலைஞரின் உடல் நலம் நலிவடைந்து உள்ளது என காவேரி மருத்துவமனை நேற்றே தெரிவித்து இருந்தது.

இதற்கிடையில் கலைஞரின் உடல் நலம் குறித்து பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து பரவி வருவதால், வதந்திகளை நம்ப வேண்டாம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின்  தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.