அதிமுகவுக்கு பிடித்துள்ள விளம்பர வெறி காரணமாக கோவையில் மேலும் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுபஸ்ரீ என்ற இளம்பெண் அதிமுக  பேனர் சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தார்.  இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதனையடுத்து இனி பொதுமக்களை பாதிக்கும் வகையில்  பேனர் வைப்பதில்லை என அரசியல் கட்சிகள் முன்வந்து உறுதியளித்துள்ளனர். 

இந்நிலையில் அதிமுக கொடிக்கம்பம் விழுந்து அதனால் ஏற்பட்ட விபத்தில் கோவையில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.  இது மேலும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற இராதா நேற்று தன் இருசக்கர வாகனத்தில் விமானநிலையம் சந்திப்பிலிருந்து நீலாம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கோல்டு வின்னர் அருகே சென்ற போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த அதிமுக கொடி கம்பம் கீழே சாய்ந்தது,  அப்போது தன் மீது அது விழாமல் இருக்க அனுராதா பிரேக் அடித்துள்ளார் அந்த நேரத்தில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததாக தெரிகிறது.  அதிமுக கொடிக்கம்பம் விழுந்த அதிர்ச்சியில் தான் இந்த விபத்து நடந்ததாகவும் அப்போது பின்னால் வந்த லாரி அனுராதா கால் மீது ஏறி நசுக்கியதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த லாரி நித்தியானந்தம் என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீதும் ஏறி அவரும் அதில்  காயமடைந்துள்ளதாக தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின்,  கோவையில் அனுராதா என்ற பெண் விபத்துக்குள்ளானதற்கு அதிமுக கொடி கம்பம் சரிந்து விழுந்ததே காரணம்.  காவல்துறையினர் அதை மறுப்பதாகவும் புகார் எழுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.  அதிமுகவின் விளம்பர வெறியால் ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.  அதிமுகவின் விளம்பர வெறிக்கு எப்போதுதான் முற்றுப்புள்ளி என அவர்  கேள்வி எழுப்பியுள்ளார்.