பெங்களூரு சிறையில் சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.  வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன்? திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினி கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

அதில்  தமிழகத்தின் 45 கிராமங்களில் பெட்ரோகெமிக்கல் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது என்பது, எடப்பாடி அரசு,  பாஜக 'எள்' என்றால் 'எண்ணெய்' ஆக இருப்பதையே காட்டுகிறது என திண்டல் செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்காமல்,ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அமைச்சர்களை சந்திப்பது வேதனையளிக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு சிறையில் சசிகலா தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.  வாய் திறக்காமல் மவுனமாக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் வரலாறு காணாத குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் தேவை பற்றி துளியும் கவலைப்படாமல் தூங்கிக் கொண்டிருக்கும் அரசு, ஆந்திர அரசுடன் உரிய நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சென்னைக்கு கிடைக்க வேண்டிய 12 டிஎம்சி  கிருஷ்ணா நீரை பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனை விமர்சிப்பதில் அதிமுகவும், பாஜ.,வும் இணைந்துள்ளதன் மூலம் அவர்களின் ரகசிய கூட்டணி வெளிப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.