சட்டை கிழிக்கப்பட்ட ஸ்டாலின் மற்றும் 89 திமுக எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகாரளிக்க சென்று ஏமாற்றத்தோடு திரும்பியிருக்கின்றனர்.
ஆளுனரை சந்தித்து விட்டு நேராக மெரீனா கடற்கரையில் வந்து உண்ணாவிரத்தில் அமர்ந்து விட்டார்.

அவருடன் திமுகவின் 89 எம்எல்ஏக்களும் கனிமொழி உள்ளிட்ட எம்பிக்களும் காந்தி சிலை அருகே அமர்ந்து விட்டனர்.
சபாநாயகரின் ஒரு தலைபட்சமான இந்த முடிவை எதிர்த்து ஸ்டாலின் இந்த அறப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது.

கடந்த மாதம்தான் மெரீனாவில் ஒரு சிறு பொறி ஏற்பட்டு தமிழகம் முழுவதும் போராட்டமாக வெடித்தது.
இந்த நிலையில் ஸ்டாலின் மீண்டும் மெரீனா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மற்றுமொரு மெரீனா புரட்சி நடைபெற இருக்கிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது.
ஸ்டாலின் காலையில் இருந்தே உணவு எதுவும் உட்கொள்ளாமல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திமுக தரப்பிலிருந்து நீதிமன்றத்தை நாடவும் மறு ஓட்டெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கோரி அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னறிவிப்பின்றி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் மெரீனாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு எற்பட்டுள்ளது.
