கூட்டு சேர்ந்து  கொள்ளை அடிக்கத்தான் எடப்பாடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்… வறுத்தெடுத்த ஸ்டாலின்…

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து எப்படி கொள்ளையடிப்பது என்பது குறித்துதான் பேசி வருகிறார்களேயொழிய தமிழக மக்களுக்காக  உருப்படியாக எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என மு.க.ஸ்டாலினி குற்றம்சாட்டியுள்ளார்.

பட்ட மேற்படிப்பில் 50 சதவீதம் இடஒதுக்கீடு கோரி டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ  மாணவர்கள்  கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களின் போராட்டத்துக்கு திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. டாக்டர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும் தமிழக அரசு சிறப்பு சட்டம் கொண்டு வராமல் மவுனம் காத்து வருகிறது. இதனால், டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் போராட்டம் நடத்தி வரும் டாக்டர்களை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், டாக்டர்கள் இட ஒதுக்கீடு பிரச்சனை குறித்து மத்திய அரசு ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என கேட்டக்கொண்டார்.

இது தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதே போன்று இப்பபிரச்சனையை தீர்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுக்கு உள்ளது என தெரிவித்த ஸ்டாலின், பிரதமரை நேரில் சந்தித்துப் பேசவேண்டும் எனவும் அவர் கூறினார்.

ஆனால் இங்கு உள்ள இரு அணியினரும் கூட்டு சேர்ந்து எப்படி கொள்ளையடிக்கலாம் என்பது குறித்தே பேச்சுநடத்தி வருவதாக குற்றம்சாட்டினார்.