ஈழப் பிரச்சனையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என  அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்தனர்.

இதறகு பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, ஏதோ சொல்லி விட்டார் என, இல்லாத ஊருக்கு போகாத வழியை காட்டும்,கண்டன பொதுக்கூட்டத்தை, அ.தி.மு.க., நடத்தியிருக்கிறது. அதில், ஆபாச நடனம் அரங்கேறியிருக்கிறது. அந்த அருவருப்பை பார்த்தால், ராஜபக்சேவே சிரித்து, அலட்சியம் செய்திருப்பார் என குறிப்பிட்டுள்ளார்..


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  தன் சொந்தங்களுக்கு, நெடுஞ்சாலை துறையில் அளித்த, 'டெண்டர்'களில் ஊழல்.துணை முதலமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு; சுகாதார அமைச்சர்,விஜயபாஸ்கர், உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி என, ஊழல் பட்டியல்கள் விசாரணைக்கு அணிவகுத்து நிற்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.


அ.தி.மு.க., ஆட்சியின், ஒவ்வொரு ஊழல் தொடர்பாகவும்,நீதிமன்றத்திற்கு, தி.மு.க., சென்று கொண்டு இருக்கிறது. இனியும் தொடர்ந்து அதிமுகவின் ஊழல்களை அம்பலப்டுத்துவோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர்களின் பெயரால், அரசியல் லாபம் தேட முயற்சித்து, அதில், தி.மு.க., மீது ஊழல் புகார் சொல்வதும், ஒரு கம்பெனி என பேசுவதும், நாவடக்கம் இல்லாத, நாலாந்தர செயல் என மு.க.ஸ்லின் குற்றம்சாட்டியுள்ளார்.